வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் கோரி ஆர்ப்பாட்டம்..! நீர்த்தாரை மூலம் விரட்டிய பொலிசார்..!

வேலையில்லாத பட்டதாரிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முகமாக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோதே பொலிஸார் கண்ணீர் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை தாமரைத் தடாக வீதியில் இன்று (செய்வாய்க்கிழமை) வேலையில்லா பட்டதாரிகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மாணவர்கள் தமக்கான உரிய நியமங்களை வழங்கவேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக காலி முகத்திடலில் இருந்து கோட்டை நோக்கிச் செல்லும் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு மாற்று வழிகளைப் பயன்படுத்து வாகன சாரதிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.