சூறாவளி காரணமாக வீடுகள் காற்றினால் பாதிக்கப்பட்ட அப்பிரதேச மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்த நிலையில் காற்றின் வேகம் தணிந்த பின்னர் அவர்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
அத்துடன், எல்லைப்புறக்கிராமங்களான பெரிய புல்லுமலை, சின்னப்புல்லுமலை பிரதேசங்களில் பயன்தரும் மரங்களும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மற்றும் பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம் குழுவினர் மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடுகள் வழங்குதல் தொடர்பில் ஆராய்ந்ததுடன், அம் மக்களுக்கு சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டன.
சேத மதிப்பீடுகளை மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் பிரதேச செயலக அனர்த்த அணியினர் மற்றும் உத்தியோகத்தர்கள் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














