அக்னி இசைக்குழுவின் 18 வது ஆண்டு நிறைவு கௌரவிப்பு நிகழ்வு


செங்கலடி நிருபர் 

அக்னி இசைக்குழுவின் 18 வது ஆண்டு நிறைவையும் அதன் ஸ்தாபகர் திரு.ரகுவரன் அவர்களின் ஜனனதினத்தையெட்டியும் மட்டக்களப்பு செங்கலடி சீனிப்போடியார் மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு மிக சிறப்பாகஇடம்பெற்றது. 

ஏறாவூர் எல்லை வீதியில் அமைந்துள்ள  அக்னி அசைக்குழுவானது 18 வருடக காலமாக இசையில் மட்டுமன்றி பல சமூகப்பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றது. வருடாவருடம் மேற்கொள்ளும் கௌரவிப்பு நிகழ்வை இவ் வருடம் மிகச் சிறப்பன முறையில் நடாத்தியமையும் குறிப்பிடத்தக்கது. 

தலைவர் திரு.ரகுவரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக செங்கலடி ரமேஸ்புரம் ஆலய மதகுரு,  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் வியாழேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், ஏறாவூர்-2 கோட்டக்கல்விப் பணிப்பாளர், செங்கலடி பொதுசுகாதார வைத்தியர் மற்றும் தளவாய் சமாதான நீதிவானும் சமூகசேவையாளருமான திரு.மோகன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

இந் நிகழ்வில் கலைஞர்கள், சமூகசேவையாளர்கள், ஊடகவியலாளர்கள் , விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தோர் மற்றும் தரம் 5ல் சென்ற ஆண்டு புலமைப்பரில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களும் சிறப்பாக கௌரவப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.