கிழக்கின் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது நகை திருடிய கும்பல்! 4 பெண்களும் ஒரு ஆணும் கைது !


அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழாவின் போது நகைகள் திருடிய சந்தேகத்தின் பேரில் நான்கு பெண்களும், ஒரு ஆணும் கைதாகியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 21 பவுண் நகைகளும் மீட்டுள்ளதாக திருக்கோவில் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்திற்கு வந்த பெண் அடியார்களின் நகைகளை திருடுவதற்கென்றே
வந்த கொள்ளைக் கும்பலால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருட்டில் ஈடுபட்டவர்கள் வவுனியா போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் எனத் தெரியவருகின்றது.