மட்டக்களப்பு ஆயித்தியமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய 60 வது வருடாந்த திருச்சடங்கு



மட்டக்களப்பு ஆயித்தியமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய 60 வது வருடாந்த திருச்சடங்கு சக்தி பெருவிழாவானது  23. 06. 2018 அன்று ஆரம்பமாகி வருகின்ற 28.06.2018 வியாழக்கிழமை அன்று காலை தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவு பெற இருக்கின்றது.  அன்னையின் 60 வது ஆண்டின் நிறைவை முன்னிட்டு தல விருட்சம் எனும் நூல் வெளியீடு நிகழ்வும் 25.06.2018. திங்கட்கிழமை அன்று இரவு ஆலய முன்றலில் வெளியிட இருக்கின்றனர்.

அத்துடன் திருச்சடங்கின் நான்காம் நாள் 26. 06. 2018  ஆயித்தியமலை கற்பக பிள்ளையார் ஆலயத்திலிருந்து பூம்பந்தல் பவனியானது மிகவும் சிறப்பான முறையில் கலை கலாச்சார பாரம்பரிய நடன நிகழ்வுகளுடன் அம்மன் ஆலயத்தினை வந்தடையும்.