
(மரினோ, வினோ)
மட்டக்களப்பு தாழங்குடா பாதுகாவலர் புனித திருமுழுக்கு யோவானின் 88வது வருடாந்த பெருவிழா கூட்டுத்திருப்பலி திருகோணமலை மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கின்ஸ்லி ரொபட் மற்றும் பங்குதந்தை ஸ்ரனிஸ்லாஸ் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்றது.
இதன் போது புனிதரின் பிறப்பு விழா கொண்டாட்டம் இடம்பெற்று, புனிதரின் ஆசிர் வழங்கப்பட்டு, கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. இதன் போது பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனிதரின் ஆசிர்பெற்றனர். அருட் தந்தையர்கள் திருவிழா வாழ்த்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், ஆசிகளையும் வழங்கினர்.
இதனையடுத்து திருவிழாவின் பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. அத்துடன் மாலை 5 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுக்களும் பங்குத்தந்தை தலைமையில் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
































