மண்டூர் சங்கர்புரத்தில் நீத்தார் பெருமையை நிலை நிறுத்திய நெஞ்சம் நிறைந்த நிகழ்வு


(பெரியகல்லாறு நிருபர் ரவிப்ரியா)               
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார் என்ற கேள்விக்குப் பதிலாக மண்டூர் 13  சங்காபுரம் கிராமம் தெளிவான பதிலை ஐயா சங்காரவேல் அவர்களின் பெயரை கிராமத்திற்குப் பதிவு செய்து, அன்னாருக்கு அழியாப் புகழை அளித்த கிராமத்தில் அவரின் 10வது நினைவுதினம் அனுஸ்டிப்பட்டது வரலாற்றுச் சிறப்பமிக்க நிகழ்வாகும்.

காரைதீவு மண்ணுக்கு சுவாமி விபுலானந்தர்போல். பெருமை சேர்த்தது போல் பெரியகல்லாற்றுக்கு அமரர் பூபாலபிள்ளை சங்காரவேல் பெருமை சேர்த்துள்ளார். இருவரிடமும் பொதுவான பண்பாக மக்களிடம் உண்மையான பாசம். சமூக முன்னேற்றத்திற்கான தூர நோக்கு, அதற்கான செயற்பாடு, எழை மக்களிடம் காட்டும் உயர் பரிவு பரிகாரம் என பட்டியல் நீண்ட கொண்டே செல்லும்.

கல்வியாறு என்ற செல்லப்பெயர் கொண்ட பெரியகல்லாற்றின் தரமான குடும்பத்தின் வழித்தோன்றலான அமரர் சங்காரவேல் சமூகத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தின்  கல்வி மேம்பாட்டிற்காக மெய்யாகவே தான் வகித்த பதவிகள் அனைத்தையும் பயன்படுத்தியமை பிறந்த மண்ணின் மகிமைமையின் பிரதிபலிப்பாகவே இருந்தது.

ஆசிரியராக அரச சேவையில் இணைந்து, உதவி காணி அணையாளர், மேலதிக அரசாங்க அதிபர். அரசாங்க அதிபர். உலக வங்கி. ஐநாசபை ஆகியவற்றிலும் பணிபரியும் வாய்ப்பை தனது திறமை மூலம் பெற்றுக்கொண்ட அத்தனை பதவிகளையும் மக்களுக்காகவே அர்ப்பணித்த நேர்மை தவறாத அரச அதிகாரியாக அடையாளப்படுத்தப்படுகின்றார்.

புலமைப் பரிசில்கள் மூலம் அமெரிக்கா உட்பட பல பிற நாடுகளில் பல பயிற்சிகளை பெற்று தனது திறமையை வளர்த்துக் கொண்டவர்.

சுவாமி விபலான்தர். மற்றம் இராமகிருஸ்ண மிசன் ஜீவானந்தஜி அகியொரடன் வைத்திருந்த நெரங்கிய தொடாபு இவரை தூய்மையான ஒரு சமூக சேவகனாகப் பட்டை தீட்டியது.

இதனால் நகரம் தவிர்த்த பட்டி தொட்டி எங்கும் அவரத சிந்தனை விரிவடைந்தது. எழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் பண்பு இவரிடம் அளவுக்கதிகமாகவே காணப்பட்டது.

சமூக சமய மொழி இன பற்று இவரிடம் இறுதிவரை பிரிக்க முடியாத ஒன்றாக இடம் பிடித்திருந்தது. எல்லைப்புற மக்களின் இதயத்தில் அவா இடம் பிடித்ததற்க அதவே காரணமாக இருந்தது.

பின்தங்கிய பிரதேசங்களில் இவரின் பாதங்கள் பதியாத இடமேயில்லை. அவர் அமரராகி ஆண்டுகள் 10 கடந்தாலும் கூட மக்கள் மனதில் இறவாப் புகழுடன் இன்றும் வாழ்கின்றார். சங்காரவேல் பவுண்டேசன் என்னும் அவரது குடும்ப அமைப்பின் மூலம் கடந்த 7வருடங்களாக அவரது அபிலாசைகள் அரங்கேறிவரகின்றன.

இதுபற்றி மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளா இவ்வாறு தெரிவிக்கின்றார். வெளிநாடு செல்லும் பலர் தாய் தந்தையர் மற்றும் உறவுகளுக்கு கூட உதவ முன்வராத நிலையில் அவரது மகன் (பெயர் அவரின் விருப்பத்திற்கிணங்க தவிர்க்கப்பட்டுள்ளது.) சமூகத்தின் கல்விப் பணிக்காக இதுவரை கோடிக்கணக்கில் எவ்வித விளம்பர நோக்கமுமின்றி  செலவளித்துள்ளமையானது பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் கலந்த கொண்ட அதிதிகள் அத்தனைபேரும் குறிப்பிடத் தவறவில்லை.

சுய விளம்பரமின்றி அவர் சங்காரவேல் பவுண்டேசன் மூலம் செய்யும் இந்த பணி இறைபணிக்குச் சமமானது. அவரின் வாரிசு இந்த பணியை முன்னெடுத்துச் செய்வது சங்காரவேல் ஐயாவின் இரத்தம் இன்றும் சமூகத்திற்கு பாய்ச்சப்பட்டக் கொண்டிருக்கின்றது என்பதையே எடுத்தக் காட்டுகின்றது. இந்த அரிய முயற்சியால் வசதியற்ற மாணவர்களின் கல்வி மறுமலர்ச்சி கண்டுவருகின்றது என்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

ஐயா காலத்தில் அவருடன் சேர்ந்து சங்கர்புரத்தை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த பெண் ஒருவா குறிப்பிடுகையில் அவர் இந்தக் கிராமத்தின் தெய்வம் என உணர்ச்சிபொங்க குறிப்பிட்டார். எமக்கு அரச காணி தந்து, பாடசாலையை மேம்படுத்தி. அலயமும் அமைத்துத் தந்து எங்கள் கடவுள் என்று குறிப்பிட்டார். இது இந்தக் கிராமத்தின் குரலாகவே நாம் பதிவு செய்கின்றோம்.

அன்று சனிக்கிழமை நிகழ்வில் அத்தனை மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோரும் சமூக அமைப்புக்களின் பிரமுகர்களும் கூட மிகுந்த நன்றியுணர்வோடு கலந்து கொண்டமை ஐயாவின் மதிப்பும் மரியாதையம் இன்னும் மங்கவில்லை என்பதை மதிப்பிடக் கூடியதாக இருந்தது.

அத்தடன் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள். கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் என கல்விப்புலமே ஒன்றாகக் கூடியது நிகழ்விற்கு சிகரம் வைத்ததாக அமைந்தது.

எவ்வித கலப்புமின்றி நினைவு தினத்தை நோக்கம் கிஞ்சித்தும் சிதறாமல் நினைவு தினதித்தை இப்படிதான்  அதி சிறப்பாக நெஞ்சம் நிறைந்த நிகழ்வாக நடாத்த வேண்டும் என்பதை நிகழ்த்திக் காட்டியவர்கள் ஏற்பாட்டாளர்கள் பாராட்டக்கரியவர்கள் மட்டுமல்ல முன்மாதிரியானவர்களும் கூட. ஐயா நினைவலைகள் நின்று நிலைத்து செயற்பாடக  நீடிக்கட்டும்.