-செங்கலடி நிருபர்-
டன்ஸ்ரன் டேமியன் அவர்களினால் மறைந்த தன் தந்தையின் (அமரர் பஸ்ரியாம்பிள்ளை டன்ஸ்ரன்) அவர்களின் நினைவாக 'அர்ப்பணமாய்' கிறிஸ்தவபாடல் இறுவெட்டு வெளியீடு வெளியிடப்பட்டது.
மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலயத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் யோசப்பொன்ணையா ஆண்டகை அவர்களினால் இவ் 'அர்ப்பணமாய்' ' இறுவெட்டு வெளியிடப்பட்டது.
இறுவெட்டுவெளியிட்டு உரையாற்றிய மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்ணையா ஆண்டகை அவர்கள்
ஒளவையார் தெழிவாக பாடியுள்ளார் 'பாலும் தெழி தேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் கேலஞ்செய் துங்கக்கரிமுதலே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா' அதாவது நான் உன்கு நான்கு உணவு தருகிறேன் அதற்காக நீ எனக்கு தரவேண்டியது மூன்று இயல் இசை நாடகம் அதே போன்றுதான்
எமது விழா நாயகன் சிறுவன் டன்ஸ்ரன் டேமியன் அவர்கள் இயல் இசை ஆகிய இரு கலைகளிலே தனது திறமையைக் காட்டியுள்ளார். தனது முதல் இறுவெட்டை அவர்வெளியிட்டு இயல் என்பதினூடாக பாடலை இயற்றியுள்ளார் அதற்கு இசையையும் கொடுத்துள்ளார் இரண்டு கலைகளையும் சேர்த்து வெளியிட்டுள்ளார். இதையிட்டு நான் உண்மையிலையே மிகுந்த மகிழச்சி அடைகிறேன் அவரை பாராட்டுகின்றேன், வாழ்த்துகிறேன்.
இது இந்த தன்னாமுனை மண்ணுக்கு வரலாற்று புகழ்சேர்க்கின்ற நிகழ்வு ஏனென்றால் தன்னாமுனை மண்ணில் இப்படி ஒரு இசை வெளியிட்டை வெளியிட்டு நான் கண்டதில்லை. இவர் ஒரு இளைஞன் சிறுவயது இவ் வயதிலையே இவருக்கு ஒரு ஆர்வம் எப்படியாவது இறைவனைப்போற்றி இறுவெட்டை வெளியிடவேண்டும் என்று பல நாட்களாக கனவு கண்டார் இன்று அது தன் தந்தைக்கு செய்த ஒரு அர்ப்பணமாக வேண்டும் என்றுதான் இந்த அர்ப்பணம் இறுவெட்டை வெளியிட்டுளார். அதையிட்டு நான் அவருக்கு நன்றி கூறுகின்றேன் இவர் இயற்றிய இந்த பாடல்கள் எங்கெல்லாம் திருப்பலி பூசை நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் இது பாடப்படும் டேமியன் அவர்கள் இவரது வரலாற்றில் பெரும் சாதனை படைக்க வேண்டியுள்ளது.
சிலர் பிறக்கும் போது சாதனை படைக்கின்றார்கள் சிலர் இற்க்கும் போது சாதனை படைக்கின்றாரகள் ஆனால் செல்வன் டன்ஸ்ரன் டேமியன் இந்த வயதினிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார் அவருக்காக எமது பாராட்டுக்களையும் ஆசீர்வாதத்தையும் வழங்குவோம்.
இவரது தந்தை இவரை மிகச் சிறப்பாக வளர்த்து உருவாக்கியுள்ளார். இசையில் இவரை மேலோங்கச் செய்துள்ளார். அப்படிப்பட்ட தந்தைக்கு இவரின் அர்ப்பணம் போற்றத்தக்கது. எனவும் ஆயர் யோசப் பொன்ணையா ஆண்டகை தனது உரையில் தெரிவித்தார்.






































