குருக்கள்மடத்தில் அரங்கேற்றம் காணும் மகாபாரத சயஜந்தவன் வதை வடமோடிக் கூத்து


குருக்கள்மடம் கிராமத்தில் சயிந்தவன் வதை வமமோடிக் கூத்து (14ஆம் நாள் போர்) எதிர்வரும் 09.06.2018 சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு குருக்கள்மடம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள களரியில் இடம்பெறவுள்ளது.

அடுக்குப் பார்த்தல் நிகழ்வு கடந்த 06.06.2018 அன்று புதன் கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தது கொண்டதுடன்; அரங்கேற்ற விழாவை சிறப்பாக மேற்கொள்ளுமாறு கலைஞர்களை வாழ்த்திச் சென்றார்.

'சயிந்தவன் வதை' மகாபாரத 14ஆம் நாள் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டமைந்த ஒரு கூத்தாகும். மட்டக்களப்பில் ஆடப்பட்டுவரும் பழமையான கூத்துக்களில் ஒன்றாக இதுவும் விளங்குகின்றது.
13ஆம் நாள் மகாபாரத யுத்தத்தில் அருச்சுனன் மகன் அபிமன்யுவை சிந்துபதி மைந்தன் சயிந்தவன் கொன்று விடுகின்றான்.

சயிந்தவன் துரியோதனனின் மைத்துனனாகும். துரியோதனனின் தங்கை  துச்சடையயின் கணவன். தன் மகன் சயிந்தவனால் கொல்லப்பட்டு விட்டான் என்பதை அறிந்து ஆத்திரமுற்ற அருச்சுனன் '14ஆம் நாள் யுத்தத்தில் பொழுது மறைவதற்கு முன்னர் சயிந்தவனைக் கொல்வேன் அல்லாது போனால் தீக்குழித்து இறப்பேன்' என அருச்சுனன் சபதம் இருகின்றான்.

அருச்சுனனால் சயிந்தவனைக் கொல்லாமல் காப்பதற்காக துரியோதனன், துரியோதனனின் படைத்தளபதி துரோணர் மற்றும் சகுகினி, கர்னன் என்போர் இணைந்து மேற்கொள்ளும் உபாயங்களும் அவற்றையும் மீறி கிஷ்ணர் தந்திரோபாயம் வகுத்து அருச்சுனன் சயிந்தவனைக் கொல்வதும் இக்கூத்தின் பிரதான கதைப் பொருளாகும்.

13ஆம் நாள் யுத்தத்தில் இறந்த அபிமன்னனின் தாயான சுபத்திரையின் புலம்பல், துரோணர் படை வகுக்கும் காட்சி, துரோணர் - அருச்சுனன், வீமன் - விகர்ணன், அருச்சுனன் - கன்னன் யுத்தம்;, கிரிஷ்ணர் சூரியனை மறைத்தலும் தனது சபதம் நிறைவேறாமல் போய் விட்டதே என அருச்சுனன் புலம்பலுல், அருச்சுனன் இறங்கப் போகின்றானே என நினைத்து துரௌபதை புலம்மல், சயிந்தவன் இறந்தபின்னர் துட்சடை புலம்பல் என்பன கூத்தில் குறிப்பிடத்தக்க பகுதிகளாகும்.

கலாநிதி வ.இன்பமோகன், நுண்கலைத் துறை, கிழக்குப்பல்கலைக்கழகம், அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் இந்நிகழ்வு திரு. வீ.மகேஸ்வரன், (தலைவர், ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயம், குருக்கள்மடம்,) அவர்களின் தலைமையில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதி திரு.எம்.உதயகுமார், (அரசாங்க அதிபர், மட்டக்களப்பு,) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

சிறப்பு அதிதிகளாக கி.ப.கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், கலாநிதி சி.ஜெயசங்கர், கி.ப.கழகம் நுண்கலைத்துறை தலைவர் ,திரு.சு.சந்திரகுமார்,என்போர் கலந்து சிறப்பிக்கவுள்டளனர். கௌரவ அதிதிகளாக திரு.ஆ.சிவசம்பு (அதிபர், குருக்கள்மடம் கலைவாணி ம.வி,) புலவர் கி.அருலம்பலம்,( பருத்திச்சேனை, கன்னன்குடா) என்போர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

சித்தாண்டியைச் சேர்ந்த திரு.வே.தம்பிமுத்து அண்ணாவியார் அவர்களினால் இக்கூத்து பயிற்றுவிக்கப்பட்டது. உதவி அண்ணாவியாராக திரு.சீ.அலெக்ஸ்சாண்டர் (மட்டக்களப்பு) அவர்களும் கொப்பியாசிரியராக திரு.இ.முத்துலிங்கம், (மட்டக்களப்பு) வி.கோடீஸ்வரன் (கன்னன்குடா)  அவர்களும் சபையோராக திரு.வ.மகாலிங்கம் (குருக்கள்மடம்) திரு.க.புவிக்குமார் (பருத்திச்சேனை) திரு.து.கௌரிஸ்வரன் (மட்டக்களப்பு) திரு.கு.பிரபாகரன் (கன்னன்குடா) செயற்படுகின்றனர்.

இக்கூத்தில் கீழ்குறிப்பிடுவோர் பாத்திரம் ஏற்று ஆடுகின்றனர். கட்டியங்காரன் செல்வன் ச.சோபிதன் -சயிந்தவன், திரு.செ.சுகிலன்- தருமர்  திரு.க.சஜிதன்- வீமன்  திரு.யோ.றோகிலன்- அருச்சுனன்  திரு.த.ரவி,-கிருஷ்ணர் : திரு.வே.லோகுசன்-சுபத்திரை  திரு.ப.சந்திரசிவம்-துரோணர்  திரு.அ.ரேனுஜன்-துரியோதனன் : திரு.யோ.குருஷேத்திரன்-சகுனி  திரு.கு.அபிநயன்-கன்னன்  திரு.ர.பிலோஜன்-விகர்ணன் திரு.சா.இரவீந்திரராஜா-துச்சடை செல்வன்.ஜெ.பிரவீன்-திரௌபதை  செல்வன்.து.யதுஸ்கரன்-தோழி  செல்வன்.ப.அபிவர்மன்-தோழி