மருதமுனை மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி!


(செ.துஜியந்தன்)
இன்று வெள்ளிக்கிழமை 2.30மணியளவில் மருதமுனை பிரதான வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மருதமுனை வீ.சீ. வீதியைச் சேர்ந்த ஆர்.அப்லிஸ்(21வயது) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.இவ் விபத்து தொடர்பான பிற தகவல்கள் அறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.