கிரிஷாந்தி விக்னராஜா மெரிலேன்ட் மாநில ஆளுநர் பதவிக்காக போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில், அவரின் சகோதரரான திரு என்பவர் பால்டிமோர் நகர அரச சட்டத்தரணி பதவிக்காக போட்டியிடுகின்றார் என பிரபல ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கிரிஷாந்தி விக்னராஜா அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவின் கொள்கை வகுப்பு பணிப்பாளராக வெள்ளை மாளிகையில் பணியாற்றியுள்ளார்.
அவர்களின் பெற்றோர் 1990 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக அமெரிக்காவுக்கு சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













