(siva)
மேலும் இவர், இக் கல்லூரியின் பிரபல்யமானதும், பலம்பொருந்தியதுமான பழைய மாணவர் சங்கத்தின் கல்விப்பிரிவு செயலாளராகவும் சேவையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்போது மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசகராக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றார்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் புதிய ஆண்டுக்கான, கல்லூரியின் புதிய அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு, கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் 26.05.2018 சனிக்கிழமை அன்று கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிதிகளாக, மட்டக்களப்பு வலயக்கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) திருமதி சுஜாதா குலேந்திரகுமார், உதவி கல்வி பணிப்பாளர் சிறீதரன், கல்லூரியின் உப அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களின் அதிகளவான பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கல்லூரியின் புதிய தலைவராக கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜாவும், கல்லூரியின் அபிவிருத்தி சங்க புதிய செயலாளராக கடந்த இரு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு, கல்லூரியை பலதரப்பட்ட துறைகளில் அபிவிருத்தி அடைய அயராது உழைத்துக்கொண்டிருக்கும் அழகையா ஜெயநாதன் அவர்கள் மீண்டும் 2018/2020 ஆண்டுகளுக்கு
கல்லூரியின் அபிவிருத்தி சங்க செயலாளராக அனைத்துப் பெற்றோர்களாலும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கல்லூரியின் அபிவிருத்தி சங்க செயலாளராக அனைத்துப் பெற்றோர்களாலும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இவர், இக் கல்லூரியின் பிரபல்யமானதும், பலம்பொருந்தியதுமான பழைய மாணவர் சங்கத்தின் கல்விப்பிரிவு செயலாளராகவும் சேவையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்போது மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசகராக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றார்.
மேலும் இவர் பல தரப்பட்ட துறைகளில் சிறந்த வளவாளராகவும், மேடைப் பேச்சாளர் மற்றும் தொகுப்பாளராகவும் செயல்படுவது இவரின்
சிறப்பம்சமான ஆழுமை மிக்க செயல்பாடாக கருதப்படுவதாக பாடசாலை சமூகம் தெரிவிக்கிறது


















