கல்முனையில் வீசிய மினிச்சூறாவளி ! சொத்துக்கள் பல சேதம் !!


(காரைதீவு குறூப் நிருபர் சகா)

கல்முனையில்  நேற்று(17) மாலை 5மணியளிவில் வீசிய மினிச் சூறாவளியினால் மரங்கள் பல வீடுகளின் மீது விழுந்து சேதமாகின. பலவீடுகள் முற்றாக சேதமாகின. பல வேலிகள் தரையோடு சாய்ந்தன. தரையில் கட்டிவைக்கப்பட்டிருந்த இயந்திரப்படகுகள் காற்றில் அடித்துச்செல்லப்பட்டு கடலினுள் தள்ளப்பட்டன.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து மக்களோடு மக்களாக நின்று உதவிசெய்தார். கடலினுள் இழுத்துச் செல்லப்பட்ட படகுகளை மீனவர்கள் மீண்டும் இழுத்துக்கரைசேர்த்தனர். அக்காட்சிகளை இங்கு காணலாம்.