இலங்கையர்கள் உட்பட அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுபவர்களுக்கு தடை ! படகின் மூலம் சென்ற அகதிகளுக்கான எச்சரிக்கை !


அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் தஞ்சம் புகும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலியாவின் லிபரல் கட்சி உறுப்பினர் பீட்டர் டுட்டன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

த ஒஸ்ட்ரேலியன் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 5 வருடங்களாக அவுஸ்திரேலியாவினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளினால் சட்டவிரோத படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருவோரை தடுக்க முடியாமல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு உரிய நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்ளத்தவறும் பட்சத்தில், அவுஸ்திரேலியா எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை எதிர்நோக்க வேண்டிவரும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதேநேரம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், 131 இலங்கையர்கள் சாதாரண படகொன்றின் மூலம் அபாயகரமான பயணத்தை மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்தவர்கள் இந்தோனேசியா, மானுஸ் தீவு மற்றும் நவுறு தீவு போன்ற தீவுகளில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.