பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தரம் கலைப் பிரிவு ஆரம்பித்து வைப்பு

(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தரம் கலைப் பிரிவனை பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் ஆரம்பித்து வைத்தார். பாடசாலை அதிபர் திரு.க.இராசகுமாரன் தலைமையில்இந் நிகழ்வு  நடைபெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் கலைப்பிரிவு இன்று இப் பாடசாலையில் ஆரம்பிக்கப்படுவது பாடசாலை வரலாற்றில் ஒரு முக்கிய நாளாகும். கலைத்துறையானது ஏனை துறைகளான கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளைப் போன்று சிறப்பான தொரு துறையாகும். எல்லோரும் மருத்துவராகவோ, பொறியிலாராகவோ வரமுடியாது. ஆனால் கலைத்துறையினைப் பயிலும் ஒருவர் நிருவாக சேவை, கல்வி நிருவாக சேவை போன்ற உயர் பதவிகளையும் சட்டத்தரணி, முகாமைத்துவ உதவியாளர், ஆசிரியர் போன்ற தொழில் வாய்ப்புக்களைப் பெறும் சந்தர்ப்பம் அதிகமாகக் காணப்படுகின்றது.
கல்வினைப் பெறுவதில் வறுமை ஒரு தடையல்ல. இதற்கு உதாரணமாக அமெரிக்க ஆபிரகாம் லிங்கன், விஞ்ஞானிஅப்துல்கலாம், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பேன்றோரைக் குறிப்பிடமுடியும். எனவே வறுமையிலும் கல்வியினைத் தொடர்ந்து கற்பதன் மூலம் நிறைய விடயங்களை எம்மால் சாதிக்கமுடியும்.
இப் பிரதேசத்தின் ஆசிரியர் தேவையோ அல்லது வேறு ஆளனித் தேவையோ அதனை இப் பிரதேசத்தை சேர்ந்தவர்களைக் கொண்டே பூர்த்தி செய்ய வேண்டும். வெளியாரைக் கொண்டு பூர்த்தி செய்வதன் மூலம் பூரண சேவையினைப் பெற்றுக் கொள்ளமுடியாது.
அத்துடன்  சமூகத்தை பாடசாலையுடன் இணைக்க வேண்டும், பாடசாலை சமூகத்துடன் இணையவேண்டும். அப்போதுதான் பாடசாலையும் வளரச்சியடையும், சமூகமும் வளர்ச்சியடையும்.
இந் நிகழ்வில் கல்விச் சமூகம், நிறுவனங்களின் பணியாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.