முனைக்காட்டு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நுண்கடனை மையப்படுத்தி ஆற்றுகை செய்யப்பட்ட மகிடிக் கூத்து



நுண்கலைத்துறையினரால் முனைக்காட்டு நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நுண்கடனை மையப்படுத்தி ஆற்றுகை செய்யப்பட்ட மகிடிக் கூத்து
கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்தறையினரால் மகிடிக் கூத்து ஆற்றுகை பல இடங்களில் சமுதாயத்தின் சமகாலத் தேவையினை உணர்த்தும் படித்த கோட்பாட்டை செயல்மையப்படுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆற்றுகை செய்யப்பட்டு வரும் இக் கூத்துச் செயற்பாடு கற்றல் - கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டு தொடர் பயிற்சியினூடாகவும் கருத்தியல் ரீதியான எண்ணக்கரு விளக்கத்தினூடாகவும் நுண்கலைத்துறையின் தலைவர் திரு.சு.சந்திரகுமாரின் இணைப்பாக்கத்திலும் வழிகாட்டலிலும் உருவானது.

இக்கூத்திற்குரிய அண்ணாவியார் இராசதுரை ஆவார். தாளம் வாசிப்பவர் ஆண்டியப்பன். சமகாலச் சமுதாயத்தின் தேவை, எதிர்பார்ப்பு, அதிகார விமர்சனம், பிரச்சினையை உரையாடல், மகிழ்விப்பு, கேலி - கிண்டல், கொண்டாடல் என்பவற்றிகு ஏற்ப இக்கூத்து முன்னெடுக்கப்படுகின்றது.

இதில் போலிஸ் அதிகாரப் பாத்திரம் ஏற்று ஆற்றுகையாளராக சு.சந்திரகுமார் அவர்கள் செயற்படுகின்றார்.

முனைக்காட்டு நாகலிங்கேஸ்வரர் ஆலய நிருவாகத்தினரும், நாகசக்திக் கலைகழகத்தினரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் இக்கூத்து ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் ஊடாகவும் சமகால சமூகம் எதிர்கொள்ளும் பாரிய யுத்தமாகக் காணப்படும் நுண்கடன் பாத்திரவாக்கத்தினூடாகவும் அதன் சமுதாய விமர்சனம் வெளிப்படுவதன் காரணமாகவும் இது ஆற்றுகை செய்யப்பட்டது. 19.06.2018 அன்று இரவு 10.00 மணியளவில் ஆற்றுகை செய்யப்பட்ட இக் கூத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படுவான்கரையில் மகிடிக் கூத்துப் பரீட்சயம் இல்லை. இதனை ஆற்றுகை செய்தபோது இளைஞர்கள் புவதிகள், சிறுவர்கள், சிறுமியார், பெரியோர், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் மன மகிழ்ச்சியுடனும் கொண்டாடியும், சமுக விமர்சனத் தன்மையை உணர்ந்தும், பார்த்தும் பங்குகொண்டும் மகிழ்ந்தனர்.

மகிடிக் கூத்து பகலில் மாலை நேரத்தில்தான் ஆற்றுகை செய்வது வழக்கம். இங்கு இரவு நேரத்தில் ஆற்றுகை செய்தது முக்கியமான திருப்பு முனையாகும். பகலை விட இரவு நேர ஆற்றுகையின் தாக்கம் கனதியாக இருந்தது.

இதில் சமகால நெருக்கடிச் சூழலையும் உயிர் கொல்லியாகவும் கழுத்துக்கு சுருக்காகவும் முன்னிலை வகிக்கும் நுண்நிதி கடன் திட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனை மையப்படுத்திய பாத்திரம் நுண்கடன் கொடுப்பவராகப் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களை இலக்குவைத்து கடனாளி ஆக்கி நட்டப்படுத்தி மன உளச்சலைக் கொடுத்து மீண்டும்  கடன் எடுக்க வைத்து அடக்கி ஒடுக்கி தன் உயிரை தானே எடுக்கும் ஊக்கியாக அமையும் நுண்நிதிக்கடன் எம்மக்கள் மத்தியில் இருக்கும் முக்கிய பிரச்சினையாகும்.

இப்பாத்திர படைப்பைச் சேர்ப்பதற்கான உந்துதலைக் கொடுத்து பாத்திரத்தைப் படைத்துச் சேர்த்து செயற்படுத்தியவர் சு.சந்திரகுமார் ஆவர். அவருக்கு அண்ணாவியாருக்கும் கூத்துக் கலைஞர்களான மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிருவாகத்தினருக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். தொடர்ந்து செயற்பட சமூகம் எதிர்பார்க்கின்றது.

பாத்திரங்கள்
சீடப்பிள்ளைகள்      - காயத்ரி, ச.புஸ்பலதா 
                                            பு.ரதிகலா,ச.சுஜாஜினி
உடையார்      -          பே.நிதாகர்     
விதானையார்      - அ.சந்திரகுமார்
பொலிஸ் அதிகாரி      - சு.சந்திரகுமார்
கோசடாமுனி      - பே.நிறோஜன்
சீடப்பிள்ளை      - வி.விக்ணேஸ்வரன்
வெறுமுனி(02)      - கு.மதுசாச், சு.சஞ்சீபன்,
கம்பகாமாட்சி      - சி.சிஜானி
மதுரை மீனாட்சி       - கு.நிலுஜா
தலைக்குறவர்      - வி.கிருபானந்தம்
குறவர்கள்             - ஜீ.விலோஜினி, ச.பிலிசியா, கோ.மêரி
காமாட்சி     - பே.நிசாந்தினி
மீனாட்சி     - சுலக்சனா
காளி     - அ.ஆன் நிவேதிகா
கடன் கொடுப்பவர்     - லுக்சிகா