
(வேணு)
கல்வியமைச்சினால் பாடசாலை மாணவர்களுடாக பொதுமக்களுக்கு போதைப் பொருளற்ற எதிர்கால ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் கருத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்கும் செயல் திட்ட நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்று காலை போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி ஓன்று கருவேப்பங்கேணி விபுலாந்தா கல்லூரி மாணவர்களால் இப் பாடசாலையின் அதிபர் சா.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
புகை மனிதனுக்கு பகை – போதை உன்னைக் கொல்லும் புற்று நோய்- இளையோரே போதை வேண்டாம் - குடிக்கெதிராக ஓன்று படுவோம் என்னும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இவ் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமான இவ் விழிப்புணர்வு பேரணியானது கருவேப்பங்கேணி பிரதான வீதிகளுடாக சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.இதன் போது மாணவர்களால் பொதுமக்களுக்கு போதைப் பொருளற்ற எதிர்கால ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் எனும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டன.இதில் இப் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலையின் அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


















