
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பட்டிருப்பு புளு டைமன்ட் விளையாட்டுக்கழகம் அதன் வருடாந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு பட்டிருப்பு கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய பாண்ட் வாத்தியப் போட்டியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி, பாண்ட் வாத்தியக்குழு முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமையைத் தேடித்தந்துள்ளது.
பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் பொறுப்பாசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ( 11 ) பாடசாலை காலை ஆராதனையின் போது இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.





















