மட்டக்களப்பில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் செயலமர்வு



2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சட்டம் மற்றும் 2018 ஆம் ஆண்டின் வரி செலுத்துபவர்களின் மதிப்பீடு தொடர்பான செயலமர்வு செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் கோட்டலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் K.G.J.N. தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இறைவரித் திணைக்களத்தின் பிரதம ஆணையாளர் D.M.L ஐவான் திசாநாயக்க அவர்களும், விசேட அதிதியாக  இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் A. நதுன் குருகே மற்றும் கௌரவ அதிதியாக இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திருமதி   H.M.D. முனசிங்க அவர்களும் கலந்துகொண்டனர்.

முழு நேர செயலமர்வாக இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொழில் அதிபர்கள், விற்பனை முகவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இவர்களுக்கான விழிப்புணர்வு வழங்கும் முகமாக திணைக்களத்தின் சட்ட நடைமுறைகள் மற்றும் தொடர்பாடல் முறைமைகள் சம்மந்தமாக கலந்து கொண்டவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பில் சிறந்த  வரி செலுத்துவோருக்கான தங்கம், வெள்ளி சிறப்பு முன்னுரிமை அட்டைகள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளுக்கான கௌரவங்களும் வழங்கப்பட்டது.