போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினம்


(படுவான்.எஸ்.நவா)
சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் (04) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் தலமையில் இடம்பெற்றது.
இதன்போது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து பிரதான் வீதி ஊடாக பதாதைகள் ஏந்தியவாறு பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து ஒன்று கூடும் மண்டபத்தில் புகைத்தல் மது எதிர்ப்பு விடயம் தொடர்பாக பல கருத்துக்கள் பேசப்பட்டது. பிரதேச செயலாளர் தனது உரையில் எவ்வளவு தூரம் வினை திறன் உள்ள செயற்படுத்தப் போவதென்பது சமுதாயஅடிப்படை அமைப்புக்களின் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பாக இருக்கும் இதற்காக சேகரிக்கப்பட்ட நிதிகள் வேறு எங்கும் செல்லப்போவதில்லை பாரிய நிதி சேகரிக்கப்பட்டிருக்கின்றது.

எமது பிரதேசத்தில் அரச கொடுப்பனவுகள்  ஒன்றினை தவறவிடப்பட்டு தங்களது  குடும்ப இயல்பான வாழ்க்கைக்கு செல்ல இருக்கின்ற நிலையில் பல்வேறுபட்ட குடும்பங்களின் பிரச்சனைகள் அடையாளபடுத்தப்பட்டிருக்கின்றது அதிலும் மிகவும் முக்கியமாக வேறு எந்த உதவிகளும் கிடைக்காத குடும்பங்களுக்கு இப்படியான சேகரிக்கப்பட்ட நிதிகளிலிருந்து உதவிகளை வழங்க வேண்டும் ஒரு வருடத்தில் இரண்டு குடும்பங்களையாவது மேம்படுத்த வேண்டும் இதற்காக மே 31 தினமாக  கொண்டாடப்படுகின்றது

எனவே அன்றைய நாளில் மட்டுமல்ல எல்லா நாட்களிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்  எமது பிரதேசத்தில் ஜனவரி பெப்ரவரி மாத புள்ளி விபரப்படி 35 சதவீதம் மக்கள் போதைக்கு  அடிமையானவர்கள் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது யுத்தகாலத்திற்கு முன்பு ஒரு சிக்கிரட்டின் விலை மூன்று ரூபாவாக இருந்தது இப்போது ஜம்துரூபாவாக உயந்தள்ளது எனவே மக்கள் விழிப்பாக செயல்படவேண்டியது உங்களின் கடமையாகும் என தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்;

இதன்போது பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களும் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், தலைமையக முகாமையாளர் திருமதி பீ.ஜீவகுமார், வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்