
(காரைதீவு நிருபர் சகா)
கிழக்கிலங்கையின் முதலாவது திருப்படைக் கோவிலான திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தையொட்டிய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (23) சனிக்கிழமையும் நாளை (24) ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.
இவ் ஆலயமானது 15வருடங்களுக்குப்பிறகு எதிர்வரும் (25) திங்கட்கிழமை தனது குடமுழுக்கினைக் காணுகின்றது. 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.35மணி முதல் 10.25மணி வரையான சுபவேளையில் கும்பாபிசேக பிரதமகுரு சிவாகமவித்தியாபூசணம் விபுலமணி. சிவஸ்ரீ.சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் மகாகும்பாபிசேக குடமுழுக்குப் பெரும்சாந்தி பெருவிழா நடைபெற உள்ளது.
இதேவேளை இவ் ஆலயத்தின் மீது பாடப்பெற்ற கந்தன் காவியப்பாடல்கள் அடங்கிய இரு இறுவட்டுகள் நாளை (24) ஞாயிறுகாலை விபுலமணி. சிவஸ்ரீ.சண்முகமகேஸ்வரக்குருக்கள் ஆசியுடன் ஆலயத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் வெளியிட்டுவைக்கப்பட்டவுள்ளது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு முதற்பிரதியைப்பெறுவார்.














