
மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட கண்ணகிபுரம் வீதியானது பல வருடங்களாக சேதமடைந்து காணப்படுவதாகவும் அதனை பொதுமக்களின் பாவனைக்கு ஏற்ப குறித்த வீதியினை செப்பணிட்டு தருமாறு வலியுறித்தி இன்று வியாழக்கிழமை (14) பிரதேசத்தின் கிராம அபிவிருத்தி சங்க பொருளாளர் எஸ். சிறிகாந்தன் வீதியினை மறித்து வீதியின் குறுக்கே படுத்தவாறு தமது போராட்டத்தினை முன்னெடுத்தார்.
இவ் விதியானது சேதமடைந்து காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் வீதியின் அருகாமையில் ஸ்ரீ நரசிம்மன் ஆலயமும் காணப்படுவதனால் சுவாமியினை தரிசிக்க வருவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தே தமது போராட்டத்தினை முன்னெடுத்தார்.
இதன்போது குறித்த இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் திருமதி எஸ்.மணிமேகலாதேவி போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் கோரிக்கையினை கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த விடயம் தொடர்பாக தவிசாளரின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதுடன் இம்மாதம் இடம்பெறவுள்ள சபை அமர்விலும் இவ்வீதி தொடர்பான தங்களது கோறிக்கையினை முன்வைக்கவுள்ளதாக அவரிடம் வாக்குறியளித்தார்.
இதனையடுத்து அவர் தமது போராட்டத்தினை கைவிட்டு அவ்விடத்தினைவிட்டு வெளியேறி சென்றார். பொதுமக்கள் குறித்த நபருக்கு தமது ஆதரவினை தெரிவித்தனர்.














