மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ நாவையடி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் பால்குட பவனியும், 108 சங்காபிஸேகமும் வெள்ளிக்கிழமை (22)இடம்பெற்றது.
வியாழக்கிழமை ஆரம்பமான உற்சவத்தின் இரண்டாம் நாள் உற்சவமான வெள்ளிக்கிழமை பால்குட பவனியும், 108 சங்காபிஸேகமும் இடம்பெற்றதுடன், இன்று சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது.
பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலயத்திலிருந்து பூசைகள் இடம்பெற்ற பின்னர் ஆரம்பமான பால்குட பவனியானது பேத்தாழை பாடசாலை வீதி, பாசிக்குடா பிரதான வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.
இப்பால்குட பவனியில் தங்களுடைய நேர்த்தியை நிறைவேற்றும் பொருட்டு நூறுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
இக்கால உற்சவ பூசைகள் யாவும் சிவாகம ஜோதி, கிரியாபூசனம் ஈசனா சிவாச்சாரியார் சிவஸ்ரீ.செ.கு.உதயகுமார் குருக்களினால் இடம்பெற்றது.












