திருகோணமலையில் அறநெறி விழிப்புணர்வுப் பேரணி


(கதிரவன் திருகோணமலை)
தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு  அறநெறி விழிப்புணர்வும் பேரணி வெள்ளிக்கிழமை 2018.06.15 நடத்தப்பெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகம், பாடசாலைகள், அறநெறி பாடசாலைகள் இந்து மத அமைப்புகள் ஆலயங்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. காலை 7.00 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து பேரணி ஆரம்பித்து கடற்படைத்தள வீதீ, தபால் கந்தோர் வீதி, மின்சாரநிலைய வீதி, திருஞானசம்ந்தர் வீதி, பிரதான வீதி, விகாரை வீதி, உட்துறைமுக வீதி வழியாக திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தை பேரணி வந்தடைந்தது. அங்கு மாநாடு காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.

திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் கா.அருந்தவராசா தலையைமில் நடைபெற்ற மாநாட்டில் கல்வி அமைச்சி; முந்நாள்  மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லைநடராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி, தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.