மட்டக்களப்பின் நெசவு கண்காட்சியும் விற்பனையும்



இன்று (23.06.2018) பி.ப 2.00 மணியளவில், மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகே உள்ள பால சந்தையில் (Bridge Market) ' மட்டக்களப்பின் நெசவு' என்னும் கண்காட்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.உதயகுமார் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கண்காட்சியானது பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் உதவியுடன் கைத்தறி உற்பத்தியில் ஈடுபட்டுவருபவர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு உதயகுமார் அவர்களும் கௌரவ விருந்திதிராக திரு.தி. சரவணபவன் மாநகரசபை முதல்வர் அவர்களும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சத்தியானந்தி பிரதேச செயலாளர் மண்முணைப்பற்று, திரு இளங்குமுதன் உதவி பணிப்பாளர், கிராமிய கைத்தொழில்துறை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இக்கண்காட்சியானது இன்றும் நாளையும் நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.