'மக்கள் சேவையே மகேசன் சேவை' என வாழ்ந்து உயர் நீத்த அமரர் பூபாலப்பிள்ளை சங்காரவேல் ஒரு சிறந்த தமிழ் பற்றாளனாகவும், சமூக சேவையாளனாகவும், சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தவராவார்.எல்லைக்கிராமங்களில் தமிழ் மக்களை குடியமர்த்தி அக்கிராம மக்களின் நிலையான இருப்புக்கும், எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதியும் அவர்களுக்கான முறையானதும் சட்ட பூர்வமானதுமான காணிப்பத்திரங்களை பெற்றுக் கொடுத்ததோடு, அக்கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொடுத்தார்
அத்தோடு அக்கிராமங்களின் பாதுகாப்புக்கும் வழியமைத்துக் கொடுத்திருத்திருந்தார் இவரைப் போலவே இவரது சகோதரரான முன்னால் பாராளுமன்ற உறுப்பினா அமரர் பூபாளப்பிள்ளை கணேசலிங்கம் அவர்களும் எல்லைபுற கிராம மக்களுக்காக பல அபிவிருத்தி வேளைத்திட்டங்களை முன்னேடுத்ருந்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு இவர்கள் ஆற்றிய சேவைக்காக இவர்களது நாமங்களில் மண்டூர் 13ம் கிராமம் சங்கர்புரம் எனவும் மண்டூர் 14ம் கிராமம் கணேசபுரம் எனவும் இன்றளவும் .இக்கிராம மக்களால் பதிவு செய்யப்பட்டு அழைக்கப்படுகின்றமை அவர்களின் சேவையை பறைசாற்றுகின்றது.
![]() |
| அமரர் திருமதி சங்காரவேல் சிவஞான சௌந்தரி அவர்களால் 2013 ஆம் ஆண்டு வின்சன்ட் மகளிர் பாடசாலையில் அமைப்பின் ஆரம்ப நிகழ்வின் போது |
எமது சமூகத்தை முன்னேற்ற வேண்டுமாயின் கல்வியில் அபிவிருத்தி அடைய வேண்டும.; எனும் நோக்கில் கல்வியில் அபிவிருத்தி அடையாத கிராமங்களிலுள்ள காபொதர சாதாரணதர .பரிட்சையில் திறமைச்சித்தி பெற்று பொருளாதார உதவி தேவைப்படும் மாணவர்களை தெரிவு செய்து கா.பொ.தர .உயர் தரத்தில் கணித , விஞ்ஞான பிரிவுகளில் கற்க விரும்புகின்ற மாணவர்களுக்கு அவர்களின் இறுதிப்பரிட்சை முடியும் வரையிலும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 8000 ரூபா தொடக்கம் 10,000 ரூபா வீதம் பண உதவி வழங்கும் புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.
இப்பணிக்காக ஒவ்வொரு வருடமும் சராசரியாக 11 மாணவர்கள் வீதம் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 68 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
இதுவரைக்கும் இத்திட்டத்தில் மூன்று தொகுதி மாணவர்கள் (35 பேர்) உயர் தரப்பரிட்சையில் தோற்றி இருந்தனர். அவர்களிலிருந்து; சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் விபரம் பின்வருமாறு.
ஆண்டு மருத்துவம் பொறியல் சட்டம் ஏனையவை
2015 - 02 - 07
2016 01 02 01 08
2017 - 01 - 10
![]() |
| பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு - 2018 |
இம்மாணவர்களில் கூடுதனானோர் எல்லைப்புற கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது சிறப்பம்சமாகும். குறிப்பாக 2015ம் ஆண்டு பொறியியல் துறைக்க தெரிவு செய்யப்ட்ட மாணவன் போரினால் பாதிக்கப்பட்ட கிராமமான ஆயித்தியமலை பகுதியில் உள்ள போக்குவரத்து வசதிகளற்ற நாவக்காட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மாணவன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொறியியல் துறையில் 7ம் இடத்தினையும் திறமைச்சித்தியினையும் பெற்றிருந்தார். இதே போலவே 2016ம் ஆண்டு மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவி மட்டக்களப்பு மாவட்டதின் எல்லைக்கிராமமான வீரச்சேலை கிராமத்தைச் சேர்ந்தவரார். ஆவ்வூரில் இம்மாணவியே முதலாவது மருத்துவருமாவார்.
இதே போன்று 2016ம் ஆண்டு வணிகப்பிரிவில்; மட்டக்களப்பு மாவட்டத்தில்; 3ம் இடத்தினை பெற்ற மாணவி எல்லைக்கிராமமான காக்காச்சிவட்டையைச் சேர்ந்தவராவார் இவர் சட்டத்துறைக்கு தெரிவாகி பேராதனை பல்கழைக்கழகத்திற்கு சென்றுள்ளார் இதன் மூலம் எல்லைப்புற மாணவர்களும் நகர்ப்புற மாணவர்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிருபித்துக் காட்டியுள்ளது.

இவ்வமைப்பின் மற்றுமொரு பணியாக எல்லைப்புற கிராமங்களில்; உள்ள மாணவர்களுக்கு கணித விஞஞான பிரிவுகளில் கற்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கோடு ஒரு பாடசாலையை மையப்படத்தி அதனைச் சூழவுள்ள 4 பாடசாலைகளை ஒன்றிணைத்து சங்கர்புரத்தில் ஒரு நிலையமும், வாகரைக்கோட்டத்தின் பால்சேனையில் ஒரு நிலையமுமாக இரண்டு நிலையங்களில் 2016ம் ஆண்டிலிருந்து கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள். சனி, ஞாயிறு தினங்களில் தரமான ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்பட்டு வருகின்றது.
ஒரு நிலையத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூபா 3,50000.00 வரை செலவு செய்யப்படுகின்றது. இதன் பெறுபேறாக கடந்த இரு ஆண்டுகளிலும் இப்பாடங்களின், இந்நிலையங்களில் சித்திமட்டம் அதிகரித்ததோடு 2016ம் ஆண்டு சங்கர்புரத்தில் கணிதபாடத்தில் 100 வீத சித்தியினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தேடு ஒலிம்பியா கழகத்தினால் நடாத்தப்பட்ட கணிதப்போட்டியில் மாகாணமட்டத்தில் வெற்றி பெற்று சிங்கப்பூர் செல்வதற்காக இப்பாடசாலையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவனும் இப் பிரத்தியோக வகுப்பில் இணைந்து கல்வி கற்கும் மாணவனாகும்;. இதன் மூலம் எல்லைபபுற கிராமங்களில் உள்ள மாணவர்களின் திறமைகளை சங்காரவேல் பௌண்டேசன் அமைப்பானது தனது இப்பணியினுடே வெளிக்கொண்டு வந்திருக்கின்றது எனக் கூறினால் அது மிகையாகாது.
| வாகரை பால்சேனையில் பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது |
அத்தேடு ஒலிம்பியா கழகத்தினால் நடாத்தப்பட்ட கணிதப்போட்டியில் மாகாணமட்டத்தில் வெற்றி பெற்று சிங்கப்பூர் செல்வதற்காக இப்பாடசாலையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவனும் இப் பிரத்தியோக வகுப்பில் இணைந்து கல்வி கற்கும் மாணவனாகும்;. இதன் மூலம் எல்லைபபுற கிராமங்களில் உள்ள மாணவர்களின் திறமைகளை சங்காரவேல் பௌண்டேசன் அமைப்பானது தனது இப்பணியினுடே வெளிக்கொண்டு வந்திருக்கின்றது எனக் கூறினால் அது மிகையாகாது.
அத்தோடு வைத்தியம் பொறியல் சட்டம் போன்ற துறைகளுக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுகின்ற மாணவர்களுக்கு அவர்கள் கற்கை நெறி பூர்த்தி அடையும் வரையிலும், வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்படும் ஒரு மாணவனுக்கு தலா 8000 ரூபாவும், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்படும் ஒரு மாணவனுக்கு தலா 7000 ரூபா வீதம் மாதாந்த கொடுப்பனவாக வழங்கும் புலமைப் பிரிசில் திட்டமும் இவ்வமைப்பினால்; இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இத்திட்டத்தில் இவ்வமைப்பில் இதுவரையில் 12 மாணவர் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள் இதில் முதலாவதாக இணைத்து கொள்ளப்பட்ட மாணவி மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான தந்தாமலைப் பகுதியில் உள்ள சில்லிக்கொடியாறிலிருந்து பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான மேற்கூறப்பட்ட இப்பணிகளுக்காக இதுவரைக்கும் (கடந்த ஐந்து வருட காலப்பகுதியில்) ஒரு கோடியே ஜம்பது லட்சம் வரையுமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

| அமரர் சங்காரவேல் அவர்களின் மகன் சுகுமார் சங்காரவேல் பால்சேனையில் பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது |
இவ்வமைப்பானது இன்றுவரை சிறப்புற முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு, அமரர் சங்காரவேல் குடும்பத்தினரின் முழுமையான நிதி பங்களிப்பு காரணமாக அமைவதோடு இவ்வமைப்பினால் சமூகத்தில் கல்வியில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தி செல்வதனையும் கண்னூடே பார்க்கக்கூடியதாக உள்ளது.
இம்முயற்சியை நாங்கள் எல்லோரும் முன்னெடுத்துச் செல்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளோம். என கூறிக்கொள்வதோடு, 'நல்லது செய்தவர்கள் இறப்பதில்லை' என்பதற்கினங்க எனது பெரியப்பாவாகிய சங்காரவேல் அவர்கள் இன்னும் இறக்க வில்லை என கூறிக்கொள்கின்றேன்

திருமதி.வாஜிதா குபேந்திரராஜா
![]() |
| திருமதி.வாஜிதா குபேந்திரராஜா ( சங்காரவேல் அவர்களின் சகோதரரின் மகள் ) |
![]() |
| மண்டூர் சங்கர்புரத்தில் அமரர் சங்காரவேல் பத்தாவது ஆண்டு நினைவு தின நிகழ்வின் போது |
![]() |
| சோ.சிவலிங்கம் - தலைவர் சங்காரவேல் பௌண்டேசன் |
![]() |
| எஸ் .பிறேமானந்தம் -இணைப்பாளர் சங்காரவேல் பௌண்டேசன் |
![]() |
| என் .குபேந்திரராஜா இணைப்பாளர் சங்காரவேல் பௌண்டேசன்- |
![]() |
| எஸ்.லோகராசா - ஆலோசகர் சங்காரவேல் பௌண்டேசன் |
![]() |
| கே .கரிகரராஜ் ஆலோசகர் சங்காரவேல் பௌண்டேசன் |
![]() |
![]() |