மட்டக்களப்பில் 5௦ கோடி ரூபா செலவில் ஆயிரம் மானிய அடிப்படையிலான வீடுகள்


(ஏ.எல்.எம்.தஸ்ரீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதிகளை வழங்கும் திட்டங்களை அமுல்படுத்தும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டங்களை துரிதப்படுத்துமாறும் செயல்பாட்டு தாமதங்களை நீக்க கூடிய கவனம் செலுத்துமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் உரிய திட்டங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கேட்டுள்ளார்.

மாவட்ட செயலகத்தில் இன்று(10) நடைபெற்ற மாவட்டவீடமைப்பு அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டத்தின்போது இந்தவேண்டு கோள் விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வீடமைப்பு அதிகார சபையின் சிரேஸ்டமாவட்ட முகாமையாளர் .வீ.ஜெகநாதன் உட்பட பிரதேச செயலாளர்கள் பிரதேசசபைகளின் செயலாளர்கள். சர்வேதேசதொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த விசேட கூட்டத்தின்போது, தற்போது, இம்மாவட்டத்தில் அமுல் படுத்தப்படும் மாதிரிக் கிராமவீட்டுத்திட்டங்கள் , அதன் அடிப்படை வசதிகள் ,மேசன் தச்சுத்தொழில் பயிற்சிகள் இந்தியன் வீட்டுத் திட்டங்கள் , ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியிலான வீட்டுத்திட்டங்கள் ,மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டன.

இம் மாவட்டத்தில் தற்போது மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் ஆலோசனையில் வீடமைப்புமற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் நிதி யில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டுதலில் சுமார் 5௦ கோடி ரூபா செலவில் ஆயிரம் மானிய அடிப்படையிலான வீடுகள் வீடமைப்பு அதிகாரசபை யினால் நிறுவப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக் களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவின் தகவலதிகாரி அப்துல் லத்திப் தெரிவித்தார்.

அத்துடன் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மாதிரிக் கிராம திட்டத் தில் 589 வீடுகளும் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து யுத்தத்தில் உயிர்நீத்த படை வீரர்களின் குடும்பங்களுக்கு 39 வீடு களும், கிராம சக்தி திட்டத்தில் திறைசேரியின் நிதியில் சுமார் 2௦ கோடி ரூபா செலவில் 40 வீடுகளும் நிறுவப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஊடகப்பிரிவின் தகவலதிகாரிஅப்துல் லத்திப் மேலும் தெரிவித்தார்.

இது தவிர மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் வேண்டு கோளில் இந்தியாஅரசின்நிதி ஒதுக்கீட்டில் 42கோடிரூபா செலவில் 401 வீடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் 39 கோடி ரூபா செலவில் 580 வீடுகளும் இம்மாவட்டத்தில் நிருமாணிக்கப் பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.