
கல்குடா கல்வி வலயத்தின் ஏறாவூர் பற்று II கல்விக் கோட்டத்திற்குட்பட்ட தரம் 5 மாணவர்களை புலைமைப் பரிசில்ப் பரீட்சைக்கு தயார்படுத்தும் நோக்கில் இவ்வமர்வு உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆரபம்பப் பிரிவு) திரு. மு. யோகராஜா அவர்களால் ஒழுங்கு படுத்தப்பட்டு மட்/ககு/வந்தாறுமூலை கணேச வித்தியாலயத்தில் அதிபர் திரு. த. சித்திரவேல் மற்றும் அதிபர் திரு. த. குகபிரியன் ஆகியோரின் தலைமையில் நடாத்தப்பட்டது.
இச் செயலமர்விற்கு மாவடிவெம்பு விக்னேஸ்வரா வித்யாலயம், பலாச்சோலை விபுலானந்தா வித்தியாலயம், நெடியமடு அ.த.க பாடசாலை, களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயம், சிங்காரத்தோப்பு சரஸ்வதி வித்தியாலயம், ஒருமுழச்சோலை ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம், வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயம், உதயன் மூலை விவேகானந்தா வித்தியாலயம், விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயம் மற்றும் வந்தாறுமூலை கணேச வித்தியாலயம் ஆகிய 10 பாடசாலகளிலுருந்து 153 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு செயன்முறைத் தெளிவூட்டலை வலயத்தின் வளவாளர்களான திரு. T. மதிவானன், திரு. S. கேசவன், திருமதி. N. பிரகலாதன், திருமதி. ஏ. நித்தியநாதன், திரு. S. கிருபாகரன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
















