மீராவோடை பொது நூலக சிறுவர் பிரிவு விரிவாக்கல் நிகழ்வு !


மட்டக்களப்பு கோறளைபற்று மேற்கு பிரதேசபையின் கீழ் நிர்வாகிக்கப்படும் மீராவோடை பொது நூலகத்தில் இன்று செவ்வாய் கிழமை (03.7.2018) சிறுவர் பிரிவு விரிவாக்கல் சேவை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

நூலகர் க.ருத்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைபற்று மேற்கு பிரதேசபையின் தவிசாளர் ஜ.ரி.அமிஸ்டிம் பிரதம அதிதியாகவும் சபை உறுப்பினர்களான எஸ்.எ.அன்வர், யு.எல்.பதூர்தீன் ஆகியோர்கள் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமிம் சனசமுக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் வி.தேவநேசன் ஆகியோர்கள் விசேட அதிதிகளாக கலந்து கொண்டு சிறுவர் பிரிவு விரிவாக்கல் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

நீண்ட காலாமாக குறித்த சேவையானது செயற்படாமல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் நூலக சேவை ஆரம்பிக்கப்ட்டதனால் பிரதேசத்தில் வாழும் முன்பள்ளி மாணவர் முதல் அனைத்து சிறுவர்களும் பயனடைய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது புத்திஜீவிகள் கருத்து தெரிவித்தனர்.

தவிசாளர் சபை உப்பினர்கள் மற்றும் நூலக உத்தியோகஸ்த்தர்களுக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவித்தனர்.