
ஈழக்கவி ரசிக்குமார் எழுதிய "முட்களின் மேல் உறங்கிய இரவுகள்" கவி நூல் வெளியீட்டு விழா எதிர் வரும் 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வெல்லாவெளி விவேகானந்தபுரம் சுடர் சனசமூக நிலையமும் இளஞ்சுடர் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் இந் நிகழ்வில் பிரதேசத்தின் உத்தியோகத்தர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர். இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு குழுவினர்.













