கிழக்கை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டில் பலி !



யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை காவற்நிலையத்தில் பணியாற்றிய காவற்துறை கான்ஸ்டபில் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

மல்லாகம் சந்தியிலுள்ள காங்சேன்துறை பிராந்திய மூத்த காவற்துறை அத்தியட்சகரின் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை கான்ஸ்டபில் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

அவர் தனது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

25 வயதுடைய என்.நஸீர் என்னும் திருகோணமலையைச் சேர்ந்த காவற்துறை உத்தியோகத்தரே இவ்வாறு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குனிந்துநின்று தனது நெஞ்சில் துப்பாக்கியால் சூடு நடத்தினார் என நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து அவரது ஏகே 47 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.