மட்டக்களப்பு உட்பட மக்களுக்கான அவசர எச்சரிக்கை செய்தி !!


வானிலை அவதான நிலையம் மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலை இன்று மற்றும் நாளைய தினங்களில் 3 மீற்றர் தொடக்கம் 3.5 மீற்றர் வரை உயர்வடையக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால் , மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தினர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல் , புத்தளம் தொடக்கம் நீர்க்கொழும்பு , காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.