வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் இராசநாயகம் டிலாந்தினி (வயது 24) என்ற விசேட தேவைக்குட்பட்ட பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த யுவதி, நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண்ணின் சகோதரனான இ.ஜெனிஸ்ராஜ் கடந்த 2007 ம் ஆண்டு நீர் கொழும்பு பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தார்.
வவுனியாவில் இடம்பெற்று வரும் காணாமல் போனோர் போராட்டத்தில் குறித்த பெண் தனது தாயுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கலந்து கொண்டு தனது சகோதரனை தேடி போராடி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இதேவேளை இவருடன் இரட்டையாய் கூடப் பிறந்த மற்றொரு சகோதரி கடந்த 2017ம் ஆண்டு மரணமடைந்திருந்தமை குறிப்பிட தக்கது.













