கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் அதிபரும், இரும்பு சீமாட்டியுமான அதிபர் திலகம் திலகவதி ஹரிதாஸ் அவர்களுக்கு "கல்விச்செம்மல்" விருதினை தேசிய ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம் வழங்கியும், பாராட்டியும் கௌரவிக்கப்பட்டார். ஓய்வுபெற்றுச் செல்லும் அதிபர் திலவதி அவர்களுக்கு கல்லடி விவேகானந்தா கல்லூரியின் ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தால் பிரிவுபசாரவைபவம் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் அவரது கல்விச்சேவையை பாராட்டி பலரால் ஆற்றியசேவை பேசப்பட்டது.
மட்டக்களப்பு மண்ணில் 40 வருடங்கள் அர்ப்பணிப்பான கல்விச்சேவை செய்து மக்கள் மனங்களை வென்ற இரும்புச்சீமாட்டி திலகவதி ஹரிதாஸ் அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (24.7.2018) அரசசேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.
இவர் ஆசிரியராகவும், பிரதியதிபராகவும், அதிபராகவும் இருந்து தூய்மையான கல்விப்பணி ஆற்றிவிட்டு ஓய்வுபெற்றார். இவர் இலங்கை அதிபர்சேவை தரம் ஒன்றை சேர்ந்தவர். கல்லூரிக்கு பௌதீக வளங்களை பலம்சேர்க்கும் மூலவளமாக இருந்து கல்லடி விவேகானந்தா கல்லூரிக்கு வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி கல்லூரியை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்சென்றுள்ளார்.
இவரின் கல்விப்பணியை பாராட்டி தேசிய ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம் அவர்கள் பொன்னாடை போர்த்தியும்,"கல்விச்செம்மல்" எனும் விருதும் வழங்கிவைக்கப்பட்டது. இவ்விருது வழங்கும் நிகழ்வில் பிரதி அதிபர்களான திருமதி.பிரபாகரி இராஜகோபாலசிங்கம், திருமதி பவளசாந்தி பிறேமகுமார், உப அதிபர் திருமதி. சாந்தி சிவலிங்கம், ஆசிரியர்களான திருமதி.தயா யோகராசா, திருமதி. டிலாணி ராஜ்குமார், திருமதி.சுசாந்தினி சிவநாதன்,திருமதி. வசந்தா குமாரசாமி ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.