பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு


(ஜெ.ஜெய்ஷிகன்)

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களுக்கான தகவல் அறியும் சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் இன்று(02) காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை நடைபெற்றது.

சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் சபை உத்தியோகத்தர்களுக்கான பிரதேச சபைச்சட்டங்கள் மற்றும் தகவல் அறியும் சட்டம் சம்பந்தமான தெளிவூட்டலும் இடம்பெற்றது.

மற்றுமொரு தகவல் அறியும் சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு கறுவாக்கேணியில் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் முதியோர் சங்கப் பிரதிநிதிகள், மகளிர் மற்றும் இளைஞர்கள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை அரச, திணைக்களங்களில் இலகுவாகப் பெற்றுக் கொள்வதனை நோக்காகக் கொண்டே இச் செயலமர்வு நடாத்தப்பட்டதாக கிராமிய பொருளாதார திட்டமிடல் அமைப்பின் முகாமையாளர் வடிவேல் ரமேஸ் ஆனந்தன் தெரிவித்தார்.