பேஸ்புக் பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை செய்தி ! கணக்குகள் முடக்கப்படும் ஆபத்து !


ஈ-மெய்ல் மற்றும் பேஸ்புக் ஊடாக வருகின்ற தகவல் ஒன்றின் மூலம் அவற்றின் கடவுச் சொற்களை திருடுகின்ற நடவடிக்கையொன்று இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தகவலை திறப்பதன் மூலம் மீண்டும் கடவு இலக்கம் கோரப்படுகின்ற நிலையில், அதனை பதிவிடுகின்றபோது வேறொரு தரப்பினரால் அந்த கடவுச் சொற்கள் திருடப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே முடிந்தளவிற்கு அத்தகைய தகவல்களை திறப்பதை தவிர்க்குமாறு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மட்டக்களப்பை சேர்ந்த பாவனையாளர்களின் கணக்குகளும் முடக்கபட்டுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது. முகநூல் நண்பர் ஒருவரிடம் இருந்து வரும் வீடியோ செய்தியை பார்க்கும் பொது இந் நிலை ஏற்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கபடுகின்றன.

உங்களது கணக்கு முடக்கப்பட்டால் திரும்ப நீங்கள் புதிதாகத்தான் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க முடியும்.