பால்சேனை பொது நூலகத்திற்கு பொருட்கள் உதவி

வாகரைப் பிரதேச சபைக்குட்பட்ட பால்ச்சேனை பொது நூலகத்தினை திறந்து மக்களின் பாவனைக்கு வழங்கும் வகையில் அவற்றுக்கு தேவையான பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் என்பவரிடம் வாகரை பிரதேச சபையின் தவிசாளர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் புலம்பெயர் உறவுகளின் உதவி மூலம் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது அவுஸ்ரேலியா சிட்னி உதய சூரியன் மாணவர் உதவி மையத்தினால் புத்தக அலுமாரி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கதிரைகள், மேசைள் மற்றும் புத்தகங்கள் என்பன சில அன்பர்களின் உதவி மூலம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்தார்.