வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வரலாற்றில் முதன்முறையாக அலங்காரத்தேரின் வெள்ளோட்டம் (27) வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோஹரா கோசத்தின் மத்தியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
காலை சரியாக 10.20 மணிக்கு ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ லோகநாதக்குருக்கள் தேரிலிருந்து மணியொலித்ததும் அரோஹரா கோசம் விண்ணைப்பிளக்க தேர் நகர்ந்தது.
காரைதீவு வரலாற்றில் முருகனாலய முதல் தேர் வடம் பிடிப்பதற்காக ஆண்பெண் அடியார்கள் ஒருமணிநேரத்திற்கு முன்பாக முண்டியடித்ததைக்காணமுடிந்தது.
முன்னதாக ஆலயத்தில் இருமணிநேரம் விசேட பூஜைகள் 06குருமார்கள் சகிதம் இடம்பெற்றது. 10மணியளவில் ஆலயத்திலிருந்து கோமாதா தரிசனத்துடன் அறுமுக சண்முகப்பெருமான் கொண்டுவரப்பட்டு தேரில் வைத்து கிரியைகள் நடைபெற்றன.
சரியாக 10.20மணிக்கு தேர் நகர்ந்தது. அட்டதிக்குகளிலும் தேர் நிறுத்தப்பட்டு பஞ்சராத்தி காட்டப்பட்டு தேர் நகர்ந்தது. வடமிழுப்பதில் ஆண் ஒரு பக்கமும் பெண் ஒருபக்கமுமாக நின்று இழுத்ததைக்காணமுடிந்தது.
ஆலயபரிபாலனசபைத்தலைவர் மா.வடிவேல் உள்ளிட்ட பரிபாலனசபையினர் வெள்ளோட்டத்தை நெறிப்படுத்தினர்.
ஆலயபிரதம குரு சிவஸ்ரீ லோகநாதக்குருக்கள் அங்கு தேர்வெள்ளோட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில்:
நான்கு வேதங்களும் தேரின் நான்கு சக்கரங்கள். இது கொக்கட்டிச்சோலைத் தேர்போன்று ஆகமமுறைப்படியமைந்த பெரியதேர் அல்ல. எனவே வடம் பிடிப்பவர்கள் மிகக்கவனமாக இறைசிந்தனையோடு செயற்படவேண்டும்.
கடந்த ஆடிவேல்விழாவில் வைத்து ரதோற்சவம் அடுத்தமுறை நடாத்தவேண்டும் என கேட்டுக்கொண்டதற்கிணங்க முருகப்பெருமானின் அருள் கிடைத்திருக்கிறது.
அதன்பிரதிபலிப்பாக இன்று ரதோற்சவம் இடம்பெறுகின்றது.
இறைசிந்தனையோடு எமது பிறவித்துன்பங்களை களைய பிரார்த்தி வடம்பிடித்து அனைவரும் அருள்பெறவேண்டும். எமது மனங்களிலுள்ள மலங்களை மிருகக்குணங்களை களைந்து நல்ல சிந்தனையோடு செயற்பட்டு நிரந்தரமாக முருகப்பெருமானின் பாதாரவிந்தங்களையடைய அனைவரும் பிரார்த்திப்போமாக என்றார்.