புலிகள் மீளுருவாக்கம் தொடர்பில் விசாரணைக் குழு விக்னேஸ்வரனிடம் வாக்குமூலம்


நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கூற்று தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சென்ற விசேட விசாரணைக் குழு, அங்கு செய்தியாளர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்குவதே தமது இலக்கு என்று ராஜாங்க அமைச்சுப் பதவியைத் துறந்த விஜயகலா மகேஸ்வரன் உரை நிகழ்த்தியிருந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அரசியல்வாதிகள் மற்றும் அந்த செய்தியை சேகரித்த ஊடகவியலாளர்களிடம் இந்த குழு வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.