இவ்விரு அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியர்களான ந.துவாகரன், மா.காசிப்பிள்ளை ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள், பெற்றார்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்,
பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் திருமதி கயல்விழி அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற ஊர்வலத்தில் மாணவர்கள் அறநெறிக் கல்வியை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பிக் கொண்டு மக்களை விழிப்பூட்டும் முகமாக செயற்பட்டனர்,
கிராமத்தினை சுற்றி வலம்வந்த ஊர்வலம் இறுதியாக ஆலயத்தினை அடைந்தது. அங்கு மாணவர்களுக்கு அப்பியா புத்தகங்கள் வழங்கபட்டது .

































