
(கதிரவன் திருகோணமலை)
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செவட்ட செமண திட்டத்தின் 99வது வீடமைப்பு கிராமம் தெட்சணாபுரம், 100வது வீடமைப்பு கிராமம் கைலாயபுரம் என்பவற்றில் அமைக்க்ட்ட 47 வீடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை 2018.07.29 பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
வீடமைப்பு நிர்மாண அமைச்சர் சஜித் பிரேமதாசா இதனை பயனாளிகளுக்கு கையளித்தார். திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவு மாங்காயூற்று கிராம சேவகர் பிரிவில் இக்கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம். இம்ரான் மகரூப், அப்துள்ளா மகரூப், எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இலவச மூக்கு கண்ணாடிகளும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.




























