
(இ.சுதா)
வெல்லாவெளி பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழ்கின்ற சமுர்த்திப் பயனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விசேட செயற்றிட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் மற்றும் கிராமிய பொருளாதார மற்றும் கடற்தொழில் மீன்பிடித் துறை பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமிர்அலி, முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி, சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சிலானி வீரக்கோன்,
சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் திடலஹே, மட்டு மாவட்ட சமுர்த்தி திணைக்களப் பணிப்பாளர் பி.குணரெத்தினம், முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், சமுர்த்தி தலைமைய முகாமையாளர் திருமதி பு.ஜீவகுமார் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமூதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சமுர்த்திப் பயனாளிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் பிரதேசத்தில் பொதுப் பரீட்சைகளில் சாதனை படைத்த சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது மாத்திரமல்லாது. பயனாளிகள் ஐந்து பேருக்கு இலகு கடன் அடிப்படையில் முச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













