
(வரதன்)
மட்டக்களப்பு மாவட்ட காலபோக அறுவடை விழாவின் பிரதான நிகழ்வு கிரான் கமநல சேவை திணைக்களப்பிரிவுகுட்பட்ட மாவட்டவான் மாயவட்டைத் தெற்குக் கண்டத்தில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் (வழிபாடுகளின் பின்பு) இடம்பெற்றது.
இவ் கமநலப் பிரதேச பிரிவின் மாயவட்டை தெற்குக் கண்டத்தில் 300 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டது. இவ்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் மற்றும் முன்னாள் விவசாய அமைச்சர் கே.துரைராசசிங்கம் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உயர் அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டார்கள். இப்பகுதியில் விவசாயிகள் எதிர்நோக்கும் முக்கியபல பிரச்சனைகள் பற்றி மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.


















