கல்லடி விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் அவர்களின் மணிவிழாவையும்,ஓய்வினையும் முன்னிட்டு முன்னாள் அதிபர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் அவர்களினால் பிரதியதிபர்கள்,ஊடகவியலாளர்,ஆசிரியர்கள்,ஊழியர்கள்,ஞாபகார்த்த நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பெற்றார்கள்.
இந்நிகழ்வு திங்கட்கிழமை(30.7.2018) நண்பகல் 12.30 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி.பிரபாகரி இராஜகோபாலசிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் அவருடைய காலத்தில் கல்லூரியின் வளர்ச்சிக்கும்,கல்விரீதியான செயற்பாட்டுக்களுக்கும் அதிபருடன் இணைந்து கைகோர்த்து உழைத்து வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்ற நல்லுள்ளங்களை இதன்போது ஞாபகார்த்த சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பெற்றார்கள்.
இந்நிகழ்வில் அதிபர் திருமதி. பிரபாகரி இராஜகோபாலசிங்கம்,உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் வீ.லவக்குமார், பிரதி அதிபர்களான வீ.அமிர்தலிங்கம், திருமதி. பவளசாந்தி பிறேமகுமார், உதவி அதிபர் திருமதி. சாந்தி சிவலிங்கம், ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம், ஆசிரியர்களான டிலாணி ராஜ்குமார், சுசாந்தினி சிவநாதன், நித்தியகலா சிவநாதன், சுகந்தி சுதர்சனன், ஜீ.ரவிச்சந்திரன், எஸ்.ஐங்கரன், வசந்தா குமாரசாமி, ஜெயந்தி சிவபாதம், ரீ.அருள்தாசன், கே.சரவணன், கே.ரஞ்சித்நிமால் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இதன்போது முன்னாள் அதிபரினால் 100பேருக்கு ஞாபகார்த்த சின்னம் வழங்கி கௌரவிக்கப்பெற்றார்கள்.











































