
(வரதன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வலயக்கல்வி மட்டத்தில் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிடடு; மாவட்ட சுகாதாரசேவை திணைக்களம் மற்றும் உலகதரிசன அமைப்பினால் நாடத்தப்பட்ட ஆக்கத்திறன் சித்திரப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு
நேற்று மாலை மட்டக்களப்பு மாகாஜன கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இங்கு மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களிலும் நாடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் அதிதிகளால் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் கலந்து கொண்டார்.
மற்றும் உலக தரிசன நிறுவன மாகாணப்பணிப்பாளர் எ.ரமேஸ் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்கள் மாவட்ட சுகாதாரசேவை திணைக்கள உயர் அதிகாரிகள், சுகாதாரசேவை பரிசோதகர்கள், மாணவர்கள் பொதுமக்கள் பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர். இங்கு பின்தங்கிய பிரதேச மாணவர்கள் தமது திறமையை வெளிப்படுத்தி அதிக பரிசில்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





















