மட்டக்களப்பு பிராந்திய காப்புறுதி பணிமனைக்கு முதற் தடவையாக விஜயம் செய்த உயர் மட்டக் குழு



(ரவிப்ரியா)
மட்டக்களப்பு பயனியர் வீதியில் அமைந்துள்ள இலங்கை காப்புறுதியின் பிராந்திய பணிமனைக்கு இலங்கை காப்புறுதியின் கொழம்பு தலைமையக உயர்மட்ட முகாமைத்துவ குழு ஒன்று 6ந்திகதி மாலை முதற்தடவையாக விஜயம் செய்தது. இக்குழுவினரை பிராந்திய விற்பனை முகாமையாளர் புவனேந்திரன், தலைமையில் நிருவாக உத்தியோகத்தர் திருமதி கருணாகரன், மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து சம்பிரதாயபூர்வமாக வெற்றிலை கொடுத்து வரவேற்றனர்.

வரவேற்புரையை முன்னிலை அமைப்பாளர் சி.எம். அரசரெட்ணம் மேற்கொண்டார். விற்பனை முகாமையாளா என். பவனேந்திரன் பிராந்திய அலுவலகத்தின் வளர்ச்சிப் போக்கை சுருக்கமாக விளக்கினார்.

வருகை தந்திருந்த உதவி பொது முகாமையாளர் (தேசிய விற்பனை)  சுடத் நிசாந்த, பிரதான உத்தியோகத்தர் ருக்மன் வீரரட்ண, மற்றும் எஸ்.பரணவிதான, மோட்டார் கொடுப்பனவு முகாமையாளர் லலித் ஜயசிங்க, சி ஈ ஓ சந்தான அழுத்கம ஆகியோர் மிகவும் சினெகபூர்வமான சிறு உரையை நிகழ்த்தினர். சில பரிசுப் பொதிகளையும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைத்தனர்.

அனைத்து கள உத்தியோகத்தர்களையும் தனித்தனியே கைலாகு கொடுத்து வாழ்த்தி விடைபெற்றனர். குறுகிய நேர விஜயமாக இருந்தபோதும் கூட தங்களக்கு குதூகலமும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்தததாக வெளிக்கள உத்தியோகத்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இனிமேல் அவர்கள் மீண்டும் மீண்டும் வருகை தர இருப்பதாகவும் தெரிவித்தனர்.