-செங்கலடி நிருபர் -
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவுக்குப்பட்ட வந்தாறுமூலை பாளமடு தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குப்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவடிவேம்பு -2 பகுதியைச் சேர்ந்தவிஸ்வலிங்கம் ஏரம்பமூர்த்தி (வயது 65) மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளவர் ஆவார்.
உயிரிழந்தவர் தனது கால்நடை பண்ணைக்கு சென்று கொண்டிருந்த வேளை இன்று காலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

















