மட்டக்களப்பு 39ம் கிராமம் வாழைக்காலை அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 23ந் திகதி திங்களன்று ஆரம்பமாகி அபிசேக பூஜையும், அலங்கார பூஜையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இன்றிரவு வியாழக்கிழமை கன்னித் தமிழ் மன்றத்தின் கலைநிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
27ந் திகதி வெள்ளிகாலை பாற்காவடி, பறவைக்காவடி, அலகு போடுதல், கற்பூரச்சட்டி எடுத்தல் பொன்ற நிகழ்வுகள் அலயத்திலிருந்து அரம்பமாகி தாந்தாமலை ஸ்ரீ முருகன் அலயத்தை சென்றடையும்.
28ச் திகதி அதிகாலை திருப்பொற்சுண்ணம் பூசை இடம்பெற்று, காலை 5.00மணியளவில் வாழைக்காலை வாவியில் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
உற்சவகால பிரதம குருவாக அரசடித்தீவு விக்னேஸ்வரர் அலய சிவஸ்ரீ கி.திருமேனிப்பிள்ளை குருக்களும், ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சி.நாதன் குருக்களும், வெள்ளிமலை பிள்ளையார் ஆலய குரு சிவஸ்ரீ சி. திசநாதன் குருக்களும் இணைந்து கிரியைகளை மேற்கொள்வர்.













