(கதிரவன் திருகோணமலை)
காலை 8.15 மணிக்கு கொலை நடைபெற்ற சிறுப்பிட்டியில் ஒன்றிணைந்த பொது மக்கள் அங்கிருந்து 2 கி.மீற்றர் வரை வீதிவழியாக பேரணியை மேற்கொண்டு திருகோணமலை புல்மோட்டை வீதியில் இலுப்பைக்குளம் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் திருகோணமலை அமைப்பாளர் த.புஸ்ராசா பேரணியில் கலந்து கொண்டார். சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளும்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கமும் சமுகமளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். சம்பவ இடத்திற்கு திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில கடுபிட்டி, நிலாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அனில் ஜயசிங்கவும் சமுகமளித்திருந்தர். ஆர்ப்ட்டத்தில் ஈடுபடுபவர்களால் போக்குவரத்துக்கும். ஏனைய பொது மக்களுக்கும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க பெருமளவிலான பொலிசாரும் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தரனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பிரதேசத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும், அண்மைக்காலமாக இப்பகுதியில் திருட்டு சம்வங்கள் இடம் பெற்று வருகிறது. இதனால் நாம் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். எமக்கு நிம்மதியை ஏற்படுத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிராமத்தில் வீதி ரோந்து மேற்கொள்வதாகவும். உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு பொலிஸ் அரண் ஒன்றினை அமைப்பதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரதேச வாசிகள் காலை 10.00 மணிக்கு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.