கிழக்கு கடற்கரைகளுக்கு அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வரவு


இயற்கை வனப்புமிக்க பொத்துவில் - அறுகம்பைக் குடாவுக்கு பெருமளவு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தற்போது வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பொத்துவில், அறுகம்மைக் குடா, மட்டக்களப்பு – பாசிக்குடா, திருகோணமலை, நிலாவெளி கடற்கரைப் பிரதேங்களில் தற்போது சுற்றுலாப் பயணிகளால் நிரம்பிக் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.